திரு. S. சண்முகம் BE,MS., MISTE.,

chariman
நாம் நலமுடனும், ஆரோக்கியமாகவும் சிறப்புடன் வாழ உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. ஆனால், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதற்கு நாம் கூறும் பொதுவான காரணம், “நேரமில்லைங்க” என்பதுதான். உணவுக் கட்டுப்பாட்டில் நாம் கவனம் செலுத்தாதற்கு நாம் சொல்லும் காரணம் , ” எங்க வேலை அந்த மாதிரிங்க, செம வொர்க் பிரஷ்ஷ்ர்ங்க”. ஆனால் நம்மைக் காட்டிலும் அதிக வேலைப் பளுவுடனும், நேரமில்லாமலும், அதிக மன அழுத்தத்துடனும் இருக்கும் பலர் இதை இலாவகமாக கையாள்கிறார்கள்..
எனவே, நம் சூழலில் வாழும் அத்தகைய பெரியோர்களைக்  கண்டு அவர்கள் தமது உடல் நலனை எவ்வாறு பேணிக் காக்கிறார்கள் என்பதை கூறும் பகுதியே இது. அவர்களின் வாழ்க்கை முறை, உடற்பயிற்சிக்கு  அவர்கள் செலவிடும் நேரம், எந்த மாதிரியான உடற்பயற்சிகளை  அவர்கள் மேற்கொள்கிறார்கள், எந்த மாதிரியான உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் போது , நாமும் அவ்வாறே நமது உடல் நலனை பேணிக் காப்பதற்கு அது ஒரு உந்து சக்தியாக இருக்கும்.

முனைவர். R.நந்தகோபால் Ph.D.,

gmபார்வையில் கனிவு. சிறியவர் பெரியவர் என்றில்லாமல் அனைவரையும் சரிசமமாய் நோக்கும் அன்பான குணம். சாதாரணமாய் கோபப்பட வைக்க முடியாத முகத்தோற்றம். தெளிந்த தெள்ளறிவும் பட்டறிவு கொடுத்த அனுபவமும் கொடுத்த நிதானம். எத்ற்கும் பதட்டமடையாமல் பொறுமையாய் அனைத்தையும் கையாளும் பக்குவம். இவை அனைத்திற்கும் சொந்தக்காரர், இந்தத் தொடருக்காக இந்த முறை நாம் சந்திக்கப்போகும் பிரபலம், கோவை பி.எஸ்.ஜி. மேலாண்மைக் கல்விக் கூடத்தின் இயக்குனர் முனைவர். R.நந்தகோபால் Ph.D. அவர்கள்.
“வாங்க உட்காருங்க” என்று அன்பாய் உபசரிக்கிறார். “என்ன சாப்ட்றீங்க” என்ற அவரது உன்மையான உபசரிப்பில் அவருடைய அன்பு மிளிர்கிறது. எந்தவித பந்தாவுமின்றி எளிமையான கொங்குத் தமிழில் நம்மிடையே  உரையாடுகிறார்.

முனைவர்.திருமதி. K. சித்ரா Ph D.,

Drபொதுவாக நமது பெண்கள் தங்கள் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. வீடு, கணவன், குழந்தைகள், வேலைக்குப் போகும் பெண்களாயிருந்தால் ஆபீஸ் என்று அவர்கள் நினைவு முழுவதுமே மற்றவருக்குத்தான். மேலும், போதும் போதாதற்கு வீணாய்ப் போகிறதே என்று மிச்சம், மீதி, பழையது என்று எல்லாவற்றையும் உண்கிறார்கள். “அதான் நாள் பூரா வேலை செய்கிறோமே, தனியா எக்ஸர்ஸைஸ் வேற வேணுமா?” என்று உடற்பயிற்சிகளிலும் அவர்களுக்கு நேரமிருப்பதில்லை.
உண்மையில் அவர்கள்தாம் தமது உடல் நலத்தில் மிகுந்த அக்கறை கொள்ளவேண்டும். வேலைக்கும் போய், குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு தமது உடல் நலத்தையும் சரிவர பேணிகாக்கும் பல பெண்கள் நம்மிடையே உண்டு. அவ்வாறான பெண்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்வதன் மூலம், நமது பெண்களும் தமது ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வார்கள் என்பது எமது நம்பிக்கை. “பிரபலங்கள் வழங்கும் ஹெல்த் டிப்ஸ்” என்ற இப்பகுதியில் இந்த முறை நாம் சந்திக்கப்போகும் பிரபலம்: முனைவர். திருமதி. K. சித்ரா Ph.D., அவர்கள்.

0 comments:

கருத்துரையிடுக