முகப்பு
Affordable-Health-Insurance-for-Childrenஉடல் நலம் என்பது மிகப் பெரிய சொத்து. ஆனால், இதன் அடிப்படை சோகம் என்னவெனில் ஆரோக்கியம் நம்மை விட்டு விலகும் போதுதான் அதனைப் பற்றிச் சிந்திக்கிறோம். எனவே, நமது உடல் நலத்தினை பேணிகாப்பதின் பொருட்டு நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியதிருக்கிறது.

நாங்கள் யார்?
HealthCare2இவ்வகையான நலம் சார்ந்த விழிப்புணர்வை நமது கோவை மாவட்ட மக்களுக்கு வழங்குவதே “நலமான கோவை” யின் நல் நோக்கமாகும். இந்நோக்கத்தை சரியான முறையில் எட்டும் பொருட்டு சமூக நலன்களை சந்தைப்படுத்தும் அமைப்பு (Social Marketing Organization ) என்ற முறையில் இது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இம்மாதிரியான அமைப்புகள் நமது வாழ்வின் நடைமுறையில் வாழ்வியல் மாற்றங்களை (Behavioral Changes ) ஏற்படுத்தும் வல்லமை படைத்தவை. நாங்களும் அவ்வாறே பணியாற்ற விரும்புகிறோம்.
எமது செயல் திட்டம்
mission
இதன் பொருட்டு தகுந்த மருத்துவ அறிஞர்களின் துணையோடு, பல்வேறு ஊடகக் கருவிகள் மூலமும், துண்டு பிரசுரங்கள் மூலமும் விழிப்புணர்வை வழங்க இருக்கிறோம்.
இது வரையிலான எமது களப்பணிகளில் நாம் இரு விஷயங்களை அவதானித்திருக்கிறோம். ஒன்று நோயைப் பற்றி ஒன்றுமே அறியாமல் இருப்பது. மற்றொன்று தேவையற்ற மருத்துவ அறிவு. எனவே, இவ்விரு விஷயங்களையும் மனதில் கொண்டு த்குதி வாய்ந்த மருத்துவ வல்லுனர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் இவ்விணைய தளத்தில் பதிவு செய்ய திட்டமிட்டிருக்கிறோம். தவிரவும், பல்வேறு விதமான திட்ட முறைமைகளை (Strategies)நெறிப்படுத்தவும் விழைகிறோம்.

எமது தொலைநோக்குத் திட்டம்sunset

நமது உடல் நலத்தைப் பேணிக்காப்பதில் பல்வேறு காரணிகள் செயல்படுகின்றன.
  • நமது உணவுப் பழக்கங்கள்
  • நமது தினசரி வாழ்க்கை முறை
  • நமது சுற்றுச்சூழல்
  • சுத்தமான காற்று மற்றும் சுத்தமான தண்ணீர்
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நமது கோவை மக்கள் மேலான உடல் நலத்தைப் பெறவும் அதன் மூலம் ஒருங்கிணைந்த சமூக நலம் மேம்படவும் நலமான கோவை உறுதி பூண்டுள்ளது.
இதன் பொருட்டு தங்களின் மேலான கருத்துகளை nalamanacovai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். தங்களின் ஆலோசனைகளையும், ஆதரவையும் விரும்புகிறோம்.
தொடர்புக்கு:
நலமான  கோவை,
54/1, 2nd Floor,
4th Cross west,
STV Nagar,
Peelamedu,
Coimbatore – 641 004.
போன் : 9843125919
மின்னஞ்சல்: nalamanacovai@gmail.com
மிக முக்கியம்: இந்த இணைய தளத்தில் இடம் பெற்றிருக்கும்  கருத்துக்கள்  விழிப்புணர்வு நோக்கம் பற்றியதாகும். எனினும், ஒவ்வொருவருடைய வயது, பாலினம், அவர்தம் மருத்துவ வரலாறு, வாழ்க்கை முறை போன்றவைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவித மருத்துவ முடிவு எடுக்கும் முன்பும் தங்களின் மருத்துவர் ஆலோசனையின்றி எடுக்க வேண்டாம்.எக்காரணம் கொண்டும் சுய மருத்துவம் புரியாதீர்கள். தங்களின் உடல் லனை தங்கள் மருத்துவர் நன்கறிவார்.

0 comments:

கருத்துரையிடுக